கத்தாரில் இதுவரை 140,000க்கும் மேற்பட்ட COVID-19 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.!

Covid vaccine doses
Pic: Qatar Television

கத்தார் நாட்டில் COVID-19 தடுப்பூசியின் 1,40,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன என கோவிட் -19 குறித்த தேசிய மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான Dr Abdullatif al-Khal தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்த முயற்சி.!

கத்தாரில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் கிடைக்கத் தொடங்கியுள்ளதால், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மிக விரைவாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெலிவரி அல்லது ஷிப்பிங் மற்றும் storage செயல்முறை மற்றும் அதன் பயன்பாட்டை சோதிக்க ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாடர்னா தடுப்பூசியின் முதல் தொகுதியை கத்தார் பெற்றது என்றும், இந்த தடுப்பூசி பெரிய அளவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளுக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என Dr Abdullatif al-Khal கூறியுள்ளார்.

கத்தாரில் உள்ள பிரபல சஃபாரி மால் மீண்டும் திறப்பு.!