கத்தாரில் COVID-19 தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி; MoPH மறுப்பு.!

Covid19 exclusion criteria incorrect
Pic: The Peninsula

கத்தாரில் COVID-19 தடுப்பூசிகளுக்கான விலக்கின் அளவுகோல்கள் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவலுக்கு பொது சுகாதார அமைச்சகம் (MoPH) மறுப்பு தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்பூசிகளுக்கான விலக்கின் அளவுகோல்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய அந்த படத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவிட்டு இது தவறு என குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இந்த வார இறுதியில் குளிர்ந்த வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

நீங்கள் PHCCஆல் தொடர்பு கொள்ளப்பட்டு, COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்பட்ட பின்னர், மேற்கூறிய விலக்கின் அளவுகோல்களைப் பற்றி கவலைப்பட்டால் தயவுசெய்து 16000 என்ற COVID-19 ஹெல்ப்லைனை அழைக்குமாறு MoPH கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் COVID-19 விலக்கு விதிமுறைகளைப் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 16000 என்ற ஹெல்ப்லைனை அழைக்குமாறு பொது சுகாதார அமைச்சகம் ஊக்குவித்துள்ளது.

Pfizer-BioNTech கோவிட் -19 தடுப்பூசி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் அங்கீகரிக்கப்படுவதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் திறப்பு…முன்பதிவு தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…