கத்தார் அமீர் ஆறு நாட்டு தூதர்களுடன் சந்திப்பு.!

credentials six new ambassadors
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (09-12-2020) புதன்கிழமை காலை அமிரி திவான் அலுவலகத்தில் ஆறு நாட்டு புதிய தூதர்களிடமிருந்து தகுதிச் சான்றிதழை பெற்றார்.

Portugal நாட்டின் தூதர் HE Antonio Jose Alves de Carvalho, Dominican நாட்டின் தூதர் HE Giorgis Bhasa Hazem, Haiti நாட்டின் தூதர் Jean- Marie Francois Jr. Guilllaume, ஈரான் நாட்டின் தூதர் HE Hamid Reza Dehghani, வடக்கு மாசிடோனியா நாட்டின் தூதர் HE Shaban Jashari மற்றும் இந்தோனேசியா நாட்டு தூதர் HE Ridwan Hassan ஆகியோரிடம் இருந்து அமீர் தகுதிச் சான்றிதழை பெற்றார்.

கத்தார் Al Gharrafa பகுதியில் உள்ள ரவுண்டானாவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு.!

கத்தார் அமீர் அவர்கள் புதிய தூதர்களை வரவேற்றார், கத்தார் மாநிலத்திற்க்கும் அந்தந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு அடைய அவர்கள் வெற்றிபெற வாழ்த்தினார்.

மேலும், அமிரி திவான் அலுவலகத்தில் முன்னதாக தூதர்களுக்கு அதிகாரபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கத்தார் தேசிய தினம்: கடைகளில் களைகட்டும் பொருட்களின் விற்பனை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…