கத்தாரில் தேசிய முகவரியை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.!

Pic: The Peninsula

கத்தார் குடிமக்கள், வெளிநாட்டவர்கள் தேசிய முகவரியை (National address) பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (26-07-2020) முடிவடைகிறது.

இந்த தேசிய முகவரியை Metrash2 அப்ளிகேஷன் வழியாகவும், உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் மற்றும் அதன் சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

தேசிய முகவரியை பதிவு செய்யாதவர்களுக்கு 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது நீதிமன்றம் செல்வதன் மூலம் 5,000 ரியாலாக குறைத்து செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கி இருக்கும் குடியிருப்பாளர்கள் கத்தார் நுழைந்தவுடன் சலுகை காலத்தில் (grace period) பதிவு செய்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் தேசிய முகவரியை இதுவரை பதிவு செய்யாதவர்கள் இன்றே Metrash2 அப்ளிகேஷன் அல்லது உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் மற்றும் அதன் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்.

Pic: MOI