கத்தாரில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை.!

Pic: wgoqatar.com

கத்தாரில் இன்று (23-07-2020) மாலை 6 மணி வரை வானிலையானது பகல் நேரங்களில் சில மேகங்களுடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான தூசி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தனது தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சில பகுதிகளில் பகல் நேரங்களில் காற்று பெரும்பாலும் 20 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்கும் என்றும், கடல் பற்றிய எச்சரிக்கை மாலை வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்று (23-07-2020) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.