கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் விளக்கம்.!

Screenshot from Sheikh Dr Mohammed bin Hamad bin Al Thani's video.

கத்தார் MoPH இன் பொது சுகாதாரத் துறை இயக்குநர், ஷேக் டாக்டர் முகமது பின் ஹமத் அல் தானி (Sheikh Dr. Mohammed Bin Hamad Al-Thani) அவர்கள் கத்தாரில் கொரோனா வைரஸ் வழக்குகள் குறித்து வீடியோ பதிவு ஒன்றில் பேசினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கும் சமூகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். கத்தாரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இன்னும் மிகக் குறைவு என்றார்.‌

மேலும், மார்ச் 4 ஆம் தேதி நிலவரப்படி, கத்தாரில் உறுதிப்படுத்தப்பட்ட 8 வழக்குகள் உள்ளன. இவை அனைத்தும் ஈரானில் இருந்து ஒரே விமானத்தில் வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் வந்த அனைவருக்கும் சோதனை செய்யப்படுகிறது. நாங்கள் 8 வழக்குகளை மட்டுமே கண்டறிந்தோம். மற்ற நபர்களின் சோதனையில், வைரஸ் பாதிப்பு எதிர்மறையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டு, முழுமையான தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.