துபாயில் தீ விபத்திலிருந்து மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் பலி..!

துபாயில் தனது மனைவியை தீயில் இருந்து காப்பாற்ற முயன்றபோது, 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளான ஒரு இந்திய வெளிநாட்டவர், அபுதாபியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த, 32 வயதான அனில் நினன் என்பவர், தனது
குடும்பத்துடன் உம் அல் குவைனில் வசித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை (17-02-2020) அவர்களது குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மின்சார பெட்டியிலிருந்து ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் (Short Circuit) காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஜோடியை அறிந்த, ராஸ் அல் கைமா புனித தாமஸ் மார் தோமா தேவாலயத்தின் விகாரர் ரெவ் சோஜன்
தாமஸ் (Rev Sojan Thomas, vicar of St Thomas Mar Thoma Church) கூறுகையில், “தம்பதியினர் நேற்று முன்தினம் (17-02-2020) இரவு உம் அல் குவைனில் உள்ள ஷேக் கலீஃபா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் பின்னர் அவர்கள் செவ்வாய்க்கிழமை, அபுதாபியில் உள்ள மஃப்ராக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்” என்றார்.

“எங்களுக்கு சரியான விவரங்கள் தெரியவில்லை . ஆனால் அவரது மனைவி
நீனு, தாழ்வாரத்தில் இருந்தபோது முதலில் தீ‌ பிடித்தது. படுக்கையறையில் இருந்த அனில், தாவியிடம் ஓடி, தீப்பற்றியிருந்த மனைவியின் ஆடைகளை அகற்றி அவரை
காப்பாற்ற முயன்றார். ஆனால் துரதிஸ்டவசமாக அணில் மீதும் தீ மல
மலவென பற்றியது.” என்று விகார் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர், “இது எங்களுக்கு மிகவும் கடினமான ஒரு நேரமாகும். அவரது மனைவி நீனு இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெறப்பட்டு, நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் பாதுகாப்பாக இருக்கிறார். ஆனால் மனைவியை காப்பாற்ற முயன்று, தீயிற்கு இரையான அணிலின் மரணத்தை நினைத்து நாங்கள் அனைவரும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைகிறோம்” என்று கூறினார்.இந்த கேரள தம்பதியருக்கு நான்கு வயது மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : UAE Tamil Web