கத்தாரில் இன்று முதல் வீட்டை விட்டு வெளியேறும் போது EHTERAZ செயலி கட்டாயம்.!

கத்தார் அமைச்சரவையின் முடிவின் படி, கத்தாரிலுள்ள அனைவரும் தங்களது ஸ்மார்ட் போன்களில் EHTERAZ செயலியை  பதிவிறக்கம் செய்வது கட்டாயமாகும். COVID-19க்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட EHTERAZ பயன்பாடு பயனர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த செயலி IOS மற்றும் Android பதிப்புகளில் கிடைக்கிறது.

இந்த நடைமுறையானது இன்று முதல்
(22-05-2020) மறு அறிவிப்பு வரும் வரை
அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று முதல் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்களது ஸ்மார்ட் போன்களில் EHTERAZ செயலி கட்டாயம் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்த EHTERAZ செயலியின் நன்மைகள் என்ன.?

இந்த EHTERAZ செயலி நோய் பரவும் சங்கிலித் தொடரைக் கண்காணிக்க உதவும். மேலும், COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி எச்சரிப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய COVID-19 நோயாளிகளை உடனடியாக கண்டறிய மருத்துவ குழுக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல நோக்கங்களுக்கும் இந்த செயலி உதவும்.

நாட்டில் வைரஸ் தொடர்பான சமீபத்திய தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் இதில் கிடைக்கிறது.

இந்த செயலியை Google Play Store-லிருந்து எப்படி பதிவிறக்கம் செய்வது.?

இந்த செயலி எவ்வாறு இயங்குகிறது.?

சிவப்பு, மஞ்சள், சாம்பல் மற்றும் பச்சை என்ற வகைகளின் படி அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து பயனரின் சுகாதார தகவல்களை தானாகவே பிரித்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு பயனரின் சுயவிவரமும் QR குறியீட்டோடு இணைக்கப்படும்.

மேலும், இந்த செயலி குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் எவ்வாறு தரவிறக்கம் செய்வது போன்ற விபரங்களை கீழே உள்ள வீடியோவில் சென்று காணலாம்.