கத்தார், சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.!

Photo : The Peninsula Qatar

கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில், நேற்று பிறை தென்பட்டதால் இன்று (24-05-2020) நோன்பு பெருநாள் (ஈத் அல் பித்ர்) கொண்டாடப்படுகிறது. புனித ரமலான் மாதத்தின் இறுதி நாளான நேற்று, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில், முதல் பிறை தெரிந்தது. இதையடுத்து, இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ‌

அதன்படி, மேற்காசிய நாடுகளான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், லிபியா, சிரியா, ஜோர்டான், ஜெருசலம், லெபனான் ஆகியவற்றில், இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.

சவுதியில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தையொட்டி, ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும், நோன்பு பெருநாளை முன்னிட்டு, மசூதிகளில் வழக்கமாக நடைபெறும் தொழுகைக்கு, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளன. மக்கள் வீடுகளில் தொழுகையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Source : Dinamalar