கத்தாரில் தொழில்துறை பகுதியில் நுழைய, வெளியேற அனுமதி பெற தேவையில்லை.!

Image Credits: WGOQATAR.COM

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக ஜூன் 15ஆம் தேதி முதல் தளர்த்துவதற்கு அரசு தயாராகி வருவதால் தொழில்துறை பகுதிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த நுழைவு அனுமதி முறையை நேற்று (15-06-2020) முதல் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) செய்தி வெளியிட்டுள்ளது.

தொழில்துறை பகுதியில் நுழைய அனுமதி முறையை நீக்கினாலும், தொழில்துறை பகுதிக்குள் முகக்கவசம் அணிந்தவர்கள், பேருந்துகளில் இருக்கையின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு பயணிகள் பயணிப்பது மற்றும் Ehteraz அப்ளிகேஷனில் பச்சை நிறக் குறியீடு (சுகாதார நிலையில்) உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் காவல்துறையின் சோதனைச் சாவடிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், தொழில்துறை பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய, நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கத்தாரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதை உறுதிசெய்ய மற்றும் சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்ப அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej tamil