கத்தாரில் சில FAHES நிலையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு.!!

Fahes to extend working hours at few stations
Pic: The Peninsula Qatar

கத்தார் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்துத் துறையுடன் ஒருங்கிணைந்து FAHES அதன் ஏழு நிலையங்களில் தனது வேலை நேரத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் WOQOD ட்வீட்டில், அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வார இறுதி நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்ட ஏழு FAHES நிலையங்கள் செயல்படும் என்றும், அனைத்து FAHES நிலையங்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அல் கோரில் இயற்கை ரிசர்வ் மற்றும் கடற்கரை பூங்கா மீண்டும் திறப்பு..!

நீண்ட நேரம் திறந்திருக்கும் ஏழு FAHES நிலையங்கள்:

  • Mazrooah
  • Wukair
  • Mesaimeer
  • Shahaniya
  • Wadi Al Banat
  • Al Egda
  • Wakra

மேலும், FAHES நிலையங்கள் மூடப்படும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பு அதன் நுழைவு வாயில்கள் மூடப்படும் என்றும் WOQOD குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…