கத்தாரில் 5-வது அறுவடை திருவிழா இந்த மாதம் தொடக்கம்.!

Fifth Mahaseel Festival
Pic: File/The Peninsula

கத்தாரில் இந்த மாதம் வருடாந்திர Mahaseel (அறுவடை) விழாவின் ஐந்தாம் பதிப்பைத் தொடங்க கலாச்சார கிராம அறக்கட்டளை (Katara) தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு அறுவடை விழாவில் கத்தார் பண்ணைகளிலிருந்து புதிதாக எடுக்கப்பட்ட உள்ளூர் விளைபொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கட்டாரா தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகள் வெளியீடு.!

உள்நாட்டில் வளர்க்கப்படும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்தும், பயிர்களை வளர்க்கும் முக்கியத்துவம் மற்றும் விவசாயத் துறை வகிக்கும் முக்கிய பங்கு குறித்து, குழந்தைகள், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் பட்டறைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த விழாவானது, கத்தாரில் வளர்க்கப்படும் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை மக்களுக்கு அறிமுகம் செய்வதற்கும், உள்ளூர் பண்ணைகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்க ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது.

கத்தார் தோஹாவில் உள்ள இந்த தெரு ஆறு மாதங்களுக்கு மூடல்.!

இந்த அறுவடை விழா டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டாராவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் என்றும், அதன்பிறகு வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை Mahaseel Souq-ல் தொடர்ந்து நடைபெறும் என கட்டாரா அறிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…