கத்தாரில் இருந்து இன்று கொச்சின் செல்ல இருந்த விமானம் நாளை மறுநாள் ஒத்திவைப்பு.!

Image Credits: TPQ

கத்தார் நாட்டிலிருந்து, இந்தியாவுக்கு இந்திய குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கு இன்று (07-05-2020) வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த விமானம் நாளை மறுநாள் (09-05-2020) சனிக்கிழமை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விமான டிக்கெட் பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு புறப்படும் என்றும், 200 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனை கத்தார் இந்திய தூதரகத்தின் உச்ச அமைப்பான இந்திய கலாச்சார மையத்தில் (ICC) நேற்று காலை தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. கொச்சிக்கான விமான டிக்கெட் விலை ரூ.16,000 (QR 766) ஆகும்.

இந்த விமான டிக்கெட் பதிவுகளுக்கு கர்ப்பிணிப்பெண்கள், அவசர மருத்துவ சம்பவங்கள், துன்பத்தில் உள்ள தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

Source : The Peninsula Qatar