கத்தார் GCO வாட்ஸ்அப்பில்‌ COVID-19 தகவல் சேவை அறிமுகம்.!

GCO launches WhatsApp information service on COVID-19. Image Source : TPQ

கத்தார் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பொதுமக்கள் எளிதில் பெறுவதை உறுதி செய்வதற்காக நேற்று (06-04-2020) வாட்ஸ்அப்பில் கொரோனா வைரஸ் தகவல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

GCO இன் அறிக்கையின்படி, இந்த புதிய சேவை இலவசமாக பயன்படுத்தக்கூடியது மற்றும் கொரோனா வைரஸ் (COVID-19) பற்றிய துல்லியமான, நம்பகமான மற்றும் புதிய தகவல்களின் மையமாக செயல்படும் என கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தகவல் சேவை என்பது ஒரு தானியங்கி “Chatbot” சேவையாகும். இது கத்தாரில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) மற்றும் GCO வில் இருந்து COVID-19 பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெற உதவுகிறது.

இந்த சேவை 24/7 மணி நேரமும் இயங்குவதுடன் அரபு, ஆங்கிலம், உருது, ஹிந்தி, நேபாளம், மலையாளம் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு மொழிகளைக் கொண்டதாகும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அறிகுறிகள், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, வீட்டில் தங்குவதற்கான ஆலோசனை, பயண ஆலோசனை போன்ற பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் தகவல்களைப் பெறலாம்.

நீங்கள் இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பினால், +974 60060601 என்ற எண்ணை உங்கள் தொலைபேசியில் சேமிக்க வேண்டும். பின்னர், அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் Message செய்யுங்கள்.

அதன் பின்னர், உங்கள் தகவலைப் பெற விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கும்படி ஒரு செய்தியைக் காண்பீர்கள், மொழியை தேர்வு செய்தவுடன் நீங்கள் தகவல்களை பெறலாம்.

நீங்கள் https://wa.me/97460060601?text=Hi என்ற லிங்க் வழியாகவும் இந்த உரையாடலை தொடங்கலாம்.