வளைகுடா நாடுகளின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட GCC தலைவர்கள்.!

Gulf leaders signed aggrement
Images Credit: @spagov

சவுதி அரேபியாவில் உள்ள அல் உலா (Al Ula) நகரில் இன்று (05-01-2021) பிற்பகல் நடைபெற்ற GCC கூட்டத்தில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இரண்டு கூட்டங்களில் கத்தார் பங்கேற்பு.!!

இந்த ஒப்பந்தத்தில், குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, சவுதி நாட்டின் பட்டத்து இளவரசர் HRH முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் HE சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா, அமீரக துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான HE ஷேக் முகமது பின் ரஷீத் மற்றும் ஓமன் துணைப் பிரதமர் HE பஹத் பின் மஹ்மூத் அல் சைத் ஆகியோருடன் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களும் கையெழுத்திட்டார்.

சவுதி அரேபியாவின் அல் உலா நகரில் நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் அல் உலா ஒப்பந்தம் கையெழுத்தானது.

வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம்: குவைத் அமீர் மகிழ்ச்சி.!

மறைந்த ஓமன் சுல்தான் Qaboos bin Said bin Taimur மற்றும் குவைத் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா ஆகிய இரு பெருந்தலைவர்களின் நினைவாக இந்த உச்சி மாநாடு சுல்தான் கபூஸ் ஷேக் சபா உச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா முன்னதாக கத்தார் உடனான வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லையை திறந்துள்ளது மற்றும் வருகின்ற நாட்களில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் அமீருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த குவைத் அமீர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…