இத்தாலிக்கு இரண்டு கள மருத்துவமனைகளுடன், மருத்துவ உதவிகளையும் அனுப்பும் கத்தார்.!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் இத்தாலியில் உள்ள நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாக இத்தாலிய குடியரசிற்கு மருத்துவ உதவிகளை அனுப்ப கத்தார் அமீர் H.H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

இத்தாலிக்கு செல்லும் இரண்டு கள மருத்துவமனைகளுடன், இரண்டு கத்தார் அமிரி விமானப்படையின் இராணுவ விமானங்களை அனுப்புவது இந்த உதவியில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முதல் கள மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 5,200 சதுர மீட்டர் எனவும், இரண்டாவது மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர் எனவும், இரு மருத்துவமனைகளும் 1,000 படுக்கைகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.