லெபனான் வெடிப்புச் சம்பவம்; கத்தார் அமீர் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.!

Pic: Qatar Day

கத்தார் அமீர்‌‌ HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (04-08-2020) லெபனான் நாட்டின் அதிபர் மைக்கேல் உடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர்‌ இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறினார்.

அமீர், லெபனானுடனான கத்தாரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, வெடிப்பினால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய தேவையான அனைத்து  உதவிகளையும் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கத்தாரில், வேக வரம்பில் மாற்றம் குறித்த செய்தி தவறானவை; போக்குவரத்து துறை விளக்கம்.!

மேலும், லெபனான் நாட்டிற்கு நிரந்தர மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு, கத்தார் அமீர் அவர்களுக்கு லெபனான் அதிபர் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar