கத்தார் நாட்டின் முன்னாள் பிரதமரை, அமீர் கெளரவித்தார்..!

HH the Amir Sheikh Tamim bin Hamad Al-Thani awarded the Hamad bin Khalifa Sash to HE Sheikh Abdullah bin Nasser bin Khalifa Al-Thani.

கத்தாரின் முன்னாள் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அப்துல்லாஹ் பின் நாசர் பின் கலீஃபா அல் தானிக்கு கத்தார் நாட்டிற்கான அவரது உயரிய சேவைகளை பாராட்டும் வகையில், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி கடந்த 13 ஆம் தேதி அமிரி திவானில் நடந்த சந்திப்பின் போது “ஹமாத் பின் கலீஃபா சாஷ்” (Hamad bin Khalifa Sash) எனும் உயரிய விருதை வழங்கி கெளரவித்தார்.

இந்த விருதினைப் பெற்ற, ஷேக் அப்துல்லாஹ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அமீர் தனது பணி காலத்தின் போது அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து ஷேக் அப்துல்லாஹ் தனது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், நாட்டிற்கு சேவை செய்வதில் மிகுந்த பெருமையையும், அமீரின் ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். இன்று நான் எனது பெருமையை வெளிப்படுத்துகிறேன், அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஹமாத் பின் கலீஃபா சாஷ் வழங்கியதன் மூலம் என்னை கெளரவித்த அவரை “இறைவன் பாதுகாக்கட்டும்” என்றார்.

மேலும், தேசத்திற்கு சேவை செய்வது விலைமதிப்பற்றது, ஆனால் எனது பங்களிப்பையும் தேசத்திற்கான எனது சேவையையும் நான் மிகவும் மதிக்கிறேன், நான் எப்போதும் அவ்வாறே இருப்பேன். ஒருவர் வென்ற மரியாதை ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் குடிமகனுக்கும் நமது விலைமதிப்பற்ற நாட்டை உயர்த்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன், என அவரது ட்வீட்டில் கூறியுள்ளார்.