COVID-19 : கத்தார் ஹாஸிம் மெபிரீக் பொது மருத்துவமனையிலும் சிகிச்சை.!

New restrictions include the prohibition to visit Hazm Mebaireek General Hospital other facilities committed for Covid19 patients.

கத்தாரில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு வசதியாக ஹாஸிம் மெபிரீக் பொது மருத்துவமனை (HMGH) பயன்படுத்தப்படும் என்று ஹமாத் மருத்துவ நிறுவனம் (HMC) தெரிவித்துள்ளது.

இது ஒருங்கிணைந்த வசதியில், நோயாளிகளுக்கு உயர்தர பராமரிப்பைக் கொடுப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று ஹமாத் மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயை சமாளிக்கும் போது, சுகாதாரத் துறையின் செயல்திறன்மிக்க அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று பொது சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹனான் முகமது அல்-குவாரி தெரிவித்துள்ளார்.

COVID-19 போன்ற வேகமாக பரவும் வைரஸை எதிர்த்துப் போராட இது தேவை. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயர் தரமான பராமரிப்பை வழங்க HMGH தயாராக இருப்பதில், ஈடுபட்டுள்ள அணியின் முயற்சிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

மேலும், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கடுமையான அறிகுறிகளுக்கு உள்ளான நோயாளிகள் HMGH இல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த மருத்துவமனையில் அவர்கள் தேவையான சிகிச்சையைப் பெறுவார்கள் என்றும், மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.