கத்தார் தொழில்துறை பகுதியில் புதிதாக Satellite அவசர சிகிச்சைத் துறை திறப்பு.!

Pic: Twitter/HMC

கத்தாரில் அவசர சிகிச்சையில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஹமாத் மருத்துவக் நிறுவனம் (HMC) நேற்று (09-07-2020) தொழில்துறை பகுதியில் புதிதாக Satellite அவசர சிகிச்சைத் துறையின் (IASED) திறப்பு விழாவை நடத்தியது.

இந்த புதிய மையம் சமூகத்தில் நோயின் தாக்கம் கடுமை அல்லாத மருத்துவ நோயாளிகளுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக, இது தொழில்துறை பகுதியில் வசிப்பவர்களுக்கும் மற்றும் வேலை செய்பவர்களுக்கும் தேவைப்படும் போது அவர்களுக்குத் தேவையான பராமரிப்பை அணுக உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மையம் மற்றும் அதன் ஊழியர்களை ஹமாத் மருத்துவக் நிறுவனத்தின் SWICC குழுத் தலைவர் Dr Saad Al Kaabi பார்வையிட்டார்.

Pics: Twitter/HMC