கத்தார் HMC மருந்தகம் வீட்டு விநியோக சேவையை விரிவுபடுத்தியுள்ளது.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த வாரம் ஹமாத் மருத்துவ
நிறுவனத்தின் (HMC) மருந்தியல் துறை தனது வீட்டு விநியோக சேவையை விரிவுபடுத்தியுள்ளது என்றும், இந்த சேவை தற்போது நாடு முழுவதும் அனைத்து HMC நோயாளிகளுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

HMC மற்றும் கத்தார் போஸ்ட் (Q-Post) இடையே தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கையின் விளைவாக இந்த சேவையின் விரிவாக்கம் சாத்தியமாகியுள்ளது என்றும், புதிய மற்றும் மீள் நிரப்பல் மருந்துகளும் இதில் அடங்கும்‌ என்றும் மேலும், செல்லுபடியாகும் சுகாதார அட்டை உள்ள அனைத்து HMC நோயாளிகளுக்கும் இந்த சேவை கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

HMC இன் வீட்டு விநியோக சேவையைப் பெறுவதற்கு, நோயாளிகள் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை 16000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Q-Post அவர்களின் மருந்துகளை அடுத்த வணிக நாளில் விநியோகிக்கும். அனைத்து Q-Post டிரைவர்களும் மிக உயர்ந்த சுகாதாரத்தின் தரத்தை கடைபிடிக்கின்றனர். மேலும், குளிரூட்டல் மற்றும் சிறப்பு கையாளுதல் உள்ளிட்ட மருந்துகளை கையாள அவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது மருந்துகளின் இடைவினைகள் குறித்த கேள்விகள் உள்ள நோயாளிகள், ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை +974 4026 0747
என்ற தொலைபேசி எண் மூலம் HMC மருந்து தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது DIC@hamad.qa என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.