கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை போட்டிகள் நவம்பரில் தொடக்கம்; அட்டவணை வெளியீடு.!

கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டு‌ FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகள் நவம்பர் 21, 2022 முதல் தொடங்கும் என FIFA அறிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள அல் பேய்த் (Al Bayt) விளையாட்டு அரங்கில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 60 ஆயிரம் பேர் அமர முடியும். முதல் 4 போட்டிகள் உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த போட்டிகளின் இறுதி ஆட்டம் டிசம்பர் 18, 2022 அன்று லுசாயில் (Lusail) விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 80,000 பேர் அமர முடியும். மேலும், இந்த அரங்கிலும் அல் பேய்த் அரங்கிலும் அரை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டிகளுக்கான முன்பதிவை https://www.fifa.com/tickets என்ற இணையதளம் வழியாக சென்று பெறலாம் என்றும், டிக்கெட்டுகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்களுக்கான அட்டவணை: