கத்தாரில் எதிர்வரும் நாட்களில் ஈரப்பதமான வானிலை நிலவும்; QMD ட்வீட்.!

Humid weather expected during the week
Photo: Shutterstock

கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை முதல் வார இறுதி வரை ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுத்துறை (QMD) கணித்துள்ளது.

காற்று கிழக்கு திசையை நோக்கி நகர்வதால் ஈரப்பதம் அதிகரிக்கும் என்றும், நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சில பகுதிகளில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்று (24-08-2020) வானிலையானது முதலில் பனிமூட்டமாக இருக்கும் என்றும், சில மேகங்களுடன் பகல் நேரத்தில் வெப்பமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சில இடங்களில் மோசமான தெரிவுநிலை (Poor Visibility) குறித்து வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், இன்று குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை கோடை காலத்தில் வெப்பமான வானிலையில் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ட்வீட்டில் பதிவிட்டுள்ளது.

  • இலகுரக ஆடைகளை அணியுங்கள்.
  • அதிக திரவங்களை அருந்துங்கள்.
  • குழந்தைகளை வாகனத்தில் கவனிக்காமல் விட்டுச் செல்லாதீர்கள்.
  • திறந்தவெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram