கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 09 முதல் செல்லும் 21 விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தோஹாவிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவு அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி, ஜூன் 09 முதல் ஜூன் 19 வரை 21 விமானங்கள் இந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள 10 விமான நிலையங்கள் வரை உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களால் சேவை செய்யப்படும் விமான நிலையங்கள் :

  • கண்ணூர் (3)
  • திருவனந்தபுரம் (4)
  • கோழிக்கோடு (4)
  • கொச்சி (4)
  • திருச்சி
  • டெல்லி
  • லக்னோ
  • மும்பை
  • மதுரை
  • கோயம்புத்தூர்

விமானங்கள் பட்டியல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இதுவரை விமான விவரங்களை பட்டியலிடவில்லை, தூதரகம் தான் இந்த நோக்கத்திற்காக தூதரக இணையதளத்தில் பதிவுசெய்ததன் அடிப்படையில் விமானங்களுக்கான பயணிகள் பட்டியலை இறுதி செய்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களுக்கு பயணிகளின் பட்டியலைக் கொண்டுவருவதற்கான சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

Source: The Peninsula Qatar