VBM 5ம் கட்டம்: கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்.!

Pic: Twitter/Indigo

வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 11 புதுப்பிப்பு விமானங்களின் அட்டவணையை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம்‌ இன்று (02-08-2020) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: VBM 5ம் கட்டம்: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு நான்கு விமானங்கள்;‌ இந்திய தூதரகம் அட்டவணை வெளியீடு.!

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள புதுப்பிப்பு அட்டவணைப்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.

கத்தாரில் இருந்து ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலும் மொத்தம் 11 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு விமானம் ஆகஸ்ட் 8ம் தேதி சென்னைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar