கத்தார் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

Indian Ambassador met Minister of Administrative Development, Labour & Social Affairs
Pic: Twitter/@ADSLAQa

கத்தாரின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) அவர்கள் கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர் HE Yousuf Mohamed Al Othman Fakhroo அவர்களை நேற்று முன்தினம் (27-08-2020) சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இந்தியா, கத்தார்
இடையேயான பொதுவான அக்கறை மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று ‌(ஆகஸ்ட் 29) புதிதாக 211 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

முன்னதாக, கத்தாரில் இந்திய தூதர், கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் H.E. Mr. அலி பின் அஹமது அல்-குவாரி (Ali Bin Ahmed Al-Kuwari) அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா மற்றும் கத்தார் இடையேயான மக்கள் உறவுகள் மற்றும் வரலாற்று வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தார் மத்திய வங்கி ஆளுநருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram