வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டம்; கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

Pic: Twitter/Indigo

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் நான்காம் கட்டமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கத்தாரில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அட்டவணைப்படி, ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 16 வரை இந்தியாவின் ஆறு மாநிலங்களுக்கு 193 விமானங்கள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் Indigo நிறுவனத்தின் விமானங்கள் ஆகும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, உத்தரபிரதேசத்திற்கு 7 விமானம், மகாராஷ்டிராவுக்கு 7 விமானம், தமிழ்நாட்டிற்கு 12 விமானம், தெலுங்கானாவுக்கு 8 விமானம், கர்நாடகாவிற்கு 8 விமானம் மற்றும் கேரளாவிற்கு 151 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டமாக இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியல்