கத்தார் தொழில்துறை பகுதியில் மூன்று கள மருத்துவமனைகள்..!

தொழிலாளர்களுக்கு போதுமான மற்றும் உயர்ந்த மருத்துவ சேவையை உறுதி செய்வதற்காக தொழில்துறை பகுதியில் மூன்று கள மருத்துவமனைகளை கத்தார் அமைத்து வருகிறது. மருத்துவ சிகிச்சையுடன், கொரோனா வைரஸிற்கான சோதனைகளையும் இந்த மருத்துவமனைகள் மேற்கொள்ளப்படும் என்பதாக தெரிவித்துள்ளது.

முதலாவது மருத்துவமனையின் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மருத்துவமனை மிக விரைவில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு 40 படுக்கைகள் உட்பட மொத்தமாக 190 படுக்கைகள் பொருத்தப்படும். அவசர சிகிச்சைப் பிரிவு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 பேருக்கான சிகிச்சையை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.