கத்தாரில் Kataraவின் கடற்கரைகளுக்குள் நுழைவதற்கு கட்டணம்.!

Pic: The Peninsula Qatar

Kataraவின் கடற்கரைக்குள் நுழைவதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கத்தார் கலாச்சார மையம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு QR 50 கட்டணமும், 7 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு QR 25 கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும், 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு நுழைவு இலவசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Katara கடற்கரைக்கு நுழைவதற்கு கட்டண டிக்கெட்டுகள் ஜூலை 4 முதல்
நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் இரண்டாம் கட்டத்தில் ஜூலை 1 முதல் Katara தனது மூன்று கடற்கரைகளை  திறந்தது. இந்த மூன்று கடற்கரைகளும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை 3 மற்றும் 4இல் நீச்சல் அனுமதிக்கப்படுவதாக முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜூலை 1 பிற்பகல் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை தனிப்பட்ட ஜெட்ஸ்கிகள் (Jetski) இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar