வளைகுடா நாடுகள் குவைத் நாட்டிற்கு நுழைய தடை.!

Kuwait places restriction on entry of Gulf citizens.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குவைத் தற்காலிகமாக வளைகுடாவை சேர்ந்த குடிமக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முடியாது என்று குவைத்தின் உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த முடிவு வெளிநாட்டில் உள்ள மற்றும் அவர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வெளியேறிய குவைத் மக்களுக்கு மட்டும் விதிவிலக்காகும் என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விலக்கு குவைத்தில் உள்ள மற்றும் அவர்களின் அடையாள அட்டைகள் மூலம் நுழைந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) உறுப்பு நாடுகளின் குடிமக்களுக்கும் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், ஓமான் மற்றும் குவைத் ஆகியவை GCC-யின் உறுப்பு நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.