கத்தாரில் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் ஆய்வுகள் தீவிரம்.!

Labor accommodations’ inspections intensified. Image Source : TPQ

கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (MADSLA) தொழிலாளர்களுக்கு போதுமான இடங்களை உறுதி செய்வதற்கும், தேவையான சுகாதாரத்தை பேணுவதற்கும் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் ஆய்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

COVID-19 பரவலைத் தடுக்க மாநில தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து, சமூக மற்றும் உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க தொழிலாளர் தங்குமிடத்தில் போதுமான படுக்கை இடங்களை வழங்குவது முக்கியமானதாகும் என கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தங்குமிடத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு தேவையான வசதிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் தொழிலாளர் ஆய்வுத் துறை இயக்குநர் Mohamad Al Meer கத்தார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் ஒரு கட்டமானது, தோஹாவின் புகழ்பெற்ற பகுதிகளான
Umm Ghuwailina, Najma, Aslata, Doha Al Jadeeda, Ghanam Al Qadim, Fereej Bin Abdula Aziz, Matar Al Qadeem உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்குமிடங்களை இலக்காகக் கொண்டுள்ளது என பிரச்சாரத்தின் மேற்பார்வையாளர் Al Meer தெரிவித்துள்ளார்.

மேலும், இது நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் முன்பு திட்டமிடப்பட்ட பிரச்சாரமாகும். இது தங்குமிடத்தின் அளவை சரிபார்த்து அவர்களின் நிலைமையை சரிசெய்யும் என்றும் Al Meer கூறியுள்ளார்.

Source : The Peninsula Qatar