கத்தாரில், இன்று முதல் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான சிறப்பு வேலை நேரங்கள்.!

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கோடைக்காலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான சிறப்பு வேலை நேரம் இன்று (15-06-2020) முதல் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது.

மேலும், இதற்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சூரியனின் கீழ் அல்லது திறந்த பணியிடங்களில் செய்யப்படும் பணிகள் காலையில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும், காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது‌. ‌

இந்த முடிவுகளின் விதிகளை மதிக்குமாறு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், முடிவின் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஆய்வாளர்கள் தளங்களில் கள வருகைகளை மேற்கொள்வார்கள் என்றும், தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் எந்தவொரு நிறுவனமும் வேலை செய்ய அனுமதித்தால் மீறலை தாக்கல் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.