கத்தாரில் பரவிவரும் வெட்டுக்கிளிகள், MME பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.!

கத்தார் நாட்டில் பரவிவரும் வெட்டுக்கிளிகளை யாரும் உட்கொள்ள வேண்டாம் என்பதாக கத்தார் நகராட்சி மற்றும்‌ சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கத்தாரில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பரவும் வெட்டுக்கிளிகளை சுகாதாரம் கருதி யாரும் உட்கொள்ள வேண்டாம் என்பதாக அறிவித்ததுள்ளது‌.

மேலும், வெட்டுக்கிளிகள் பரவுவதை தடுப்பதற்காக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் இதுபற்றி “கவலைப்பட வேண்டாம்” என்பதாக தெரிவித்ததுள்ளது‌. மேலும், பண்ணை உரிமையாளர்கள் வெட்டுக்கிளிகள் பரவியுள்ள நிலங்களில் கால் நடைகளை மேய்யவிட வேண்டாம் என்பதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.