கத்தாரில், 1,474 தொழிலாளர்கள் பணியிடங்களை அதிகாரிகள் ஆய்வு.!

Image Source : adlsaqa

நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (MADLSA) உணர்வு‌ (Conscious) பிரச்சாரத்தின் முதல் வாரத்தில், 1,474 பணியிடங்களுக்கு சென்று, தொழிலாளர்கள் தங்குமிடங்கள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்தனர்.

தொழிலாளர் ஆய்வுத் துறை ஆய்வாளர்களின் கள வருகை, நாட்டின் கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதை கட்டுப்படுத்தும் அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, அமைச்சகத்தின் தொழிலாளர் ஆய்வாளர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களை பார்வையிட்டனர். மேலும், COVID-19 பரவுவதை தவிர்ப்பதற்கு கல்வித் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தடுப்பு ஆலோசனைகளை வழங்க நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதுடன், போதிய வீட்டுவசதி மற்றும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Source : Ilq.net