கத்தாரில் களைகட்டும் அறுவடை திருவிழா; புதிய இடத்திலும் தொடக்கம்..!

Mahaseel festival begins Qatara
Pics: Thajudeen/Gulf-Times

கட்டாராவின் தெற்கு பகுதியில் Mahaseel (அறுவடை) விழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் (07-01-2021) Mahaseel Souq-ல் அறுவடை விழா தொடங்கியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் முதல் கத்தார் வாகனம் இன்று சவுதிக்குள் நுழைந்தது.!

இந்த விழாவில், காய்கறிகள், பால் பொருட்கள் அலங்கார தாவரங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை வழக்கமான வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் கடைக்காரர்களும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், உள்ளூரில் தயாரிக்கப்படும் சோளம், வெள்ளரி, தக்காளி, முள்ளங்கி, கத்தரிக்காய், மூலிகைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

கத்தார் – சவுதி எல்லைகள் திறப்பு: நுழைவு மற்றும் வெளியேறும் நடைமுறைகள் வெளியீடு.!

இந்த விழாவில், தேன், பேரீத்தம்பழம், இறைச்சி மற்றும் கோழி போன்ற பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கின்றது.

COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் தங்கள் EHTERAZ பயன்பாட்டில் பச்சை குறியீட்டைக் காட்ட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கலாச்சார கிராம அறக்கட்டளை (Katara) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது.

இந்த விழாவானது, வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என கட்டாரா அறிவித்துள்ளது.

 

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…