கத்தாரில், கடல் விளையாட்டு போட்டிகள் இடை நிறுத்தம்.!

Image source : TPQ

உலகெங்கிலும் உள்ள COVID-19 நிலைமை காரணமாக அனைத்து கடல் விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தம் செய்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடல் விளையாட்டு ஆர்வலர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து வகையான (நீர்) ஸ்கூட்டர்கள் மற்றும் ஜெட் படகுகள் இயக்கத்தை, மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.