கத்தார் Mesaieed மருத்துவமனை கொரோனாவிலிருந்து குணமடைந்த கடைசி குழு நோயாளிகளை வழியனுப்பி வைத்தது.!

Pic: Twitter/HMC

கொரோனா வைரஸ் நோயிலிருந்து (COVID-19) குணமடைந்த கடைசி நோயாளிகளின் குழுவை ஹமாத் மருத்துவக் நிறுவனத்தின் (HMC) Mesiaeed மருத்துவமனை நேற்று (15-07-2020) வழியனுப்பி வைத்தது.

கத்தார் பொது சுகாதார அமைச்சர்
HE Dr Hanan Mohamed Al Kuwari நேற்று  Mesaieed மருத்துவமனைக்கு வருகை தந்து அங்கு கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த கடைசி நோயாளிகளின் குழுவை சந்தித்தார்.

Pic: Twitter/HMC

கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனை திறனை
விரிவுபடுத்துவதற்கும், அதிகரித்த நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சுகாதாரத் துறையின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் Mesaieed மருத்துவமனை திறக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளைப் பராமரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏழு வசதிகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும்.

மேலும், கத்தாரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்ட ராஸ் லாஃபன் (Ras Laffan)
மருத்துவமனை அதன் குணமடைந்த கடைசி நோயாளிகளின் குழுவை இந்த மாத தொடக்கத்தில் வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.