கத்தாரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறியதற்காக அமைச்சகம் உணவகம் ஒன்றை மூடியது.!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மீறிய காரணத்தால், கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் உணவகம் ஒன்றை 15 நாட்களுக்கு மூடியுள்ளது.

COVID-19 பரவலை தடுக்க அமைச்சகம் முன்பு வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதால், கட்டாராவில் (Katara) உள்ள Sukar Pasha உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாட்டின் அனைத்து உணவகங்கள் மற்றும் கஃபேக்களிலும் உணவு பரிமாறுவதைத் தடைசெய்யும் சுற்றறிக்கையை இந்த உணவகம் மீறியுள்ளதாகவும் அமைச்சகம்  கூறியுள்ளது.

உணவகத்திற்குள் மக்கள் கூடிவருவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar