கத்தாரில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு 570 டன் பேரீச்சம் பழங்கள் விநியோகம்.!

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வேளாண் விவகார துறை உள்ளூரில் விளைந்த 570 டன் பேரீச்சம் பழங்களை பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பேரீச்சம் பழங்களை நான்கு தொகுதிகளாக Qatar Charity, Qatar Red Crescent Society மற்றும் Hifz Alnaema Center போன்றவற்றிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் விளையும் பேரீச்சம் பழங்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் இந்த நடைமுறை 2006 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar