கத்தாரில், மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்களுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்.!

கத்தாரில் இன்று (19-04-2020) முதல் 25.04.2020 வரை மீன் மற்றும் கடல் உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளதாக கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MoCI) அறிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் குறிப்பிடப்பட்ட விலை மாத்திரமே மீன் மற்றும் கடல் உணவு பொருட்களை விற்பனை செய்யமுடியும் என்றும், விற்பனை நிலையங்கள் இதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டால் 16001 என்ற ஹாட்லைனை அழைக்குமாறு பொதுமக்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.