கத்தாரில் உத்தரவை மீறிய இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம்.!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக்குழு பிறப்பித்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததால், லுசைலில் உள்ள இரண்டு பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் அபராதம் விதித்துள்ளதாக கூறியுள்ளது.

பேருந்துகளில் அதிகபட்ச தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்றும், தொழிலாளர்களிடையே தேவையான இடைவெளியை வழங்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தால், இரண்டு  நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகளை மீறுவதாக புகார் அளிக்க அமைச்சகம் 40280660 என்ற ஹாட்லைன் வசதியையும் வழங்கியுள்ளது.