கத்தாரில் வதந்திகளை பரப்புவர்களை MOI எச்சரித்துள்ளது..!

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வதந்திகளைப் பகிர்ந்து கொள்வதில் அல்லது பரப்புவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைவூட்டியுள்ளது. இது கத்தாரில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது எனவும், இது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில், வதந்திகளை பரப்புவது அல்லது பரப்புவதில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும்‌ என கூறியுள்ளது.

மேலும், வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபட்ட எவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வரவழைக்கப்படுவார்கள். மேலும், அந்த நபருக்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நம்பகமான மூலங்களிலிருந்து தகவல்களைத் தேடவும், வதந்திகள் அல்லது புணையப்பட்ட கதைகளை நம்புவதைத் தவிர்த்து கொள்ளவும் என MOI பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் தொடர்பான எந்தவொரு செய்திக்கும் உத்தியோகபூர்வ மற்றும் நம்பகமான ஆதாரங்களைப் பின்பற்றுமாறு சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் MOI கேட்டுக்கொண்டுள்ளது.