கத்தாரில், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மூடல்..!

MME closes parks and beaches. Image Source : ilq

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுக்கும் வகையில், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Municipality and Environment) அனைத்து பூங்காக்கள் மற்றும் பொது கடற்கரைகளையும் மூடியுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் ட்விட்டரில் கூறியதாவது :

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கட்டமைப்பிற்குள், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனைத்து பூங்காக்கள் மற்றும் பொது கடற்கரைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.