புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கத்தாரில் 556 பொருட்களின் விலை குறைப்பு.!

புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில், கத்தாரில் 556 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MoCI) அறிவித்துள்ளது. மேலும், விலை குறைக்கப்பட்ட பொருட்களை இன்று (18-04-2020) முதல் வாங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

MoCI விலை குறைப்பு செய்துள்ள பொருட்களின் விலை பட்டியலை பெற கிளிக் செய்யவும்.

கத்தாரில் ரமலான் மாதம் இறுதி வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என்றும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.