கத்தாரில், வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் புதிய நடவடிக்கை.!

கத்தார் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MoCI) கை சுத்திகரிப்பான்கள் (Sanitizing), துடைப்பான்கள் மற்றும் சோப்புக்களின் விலைகளைக் கட்டுப்படுத்த, புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை கட்டுப்படுத்த, கத்தார் நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில், வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் கை சுத்திகரிப்பான்கள், துடைப்பான்கள் மற்றும் சோப்புக்களின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 214 தயாரிப்புகளின் பட்டியலையும் அவற்றின் அதிகபட்ச விலையையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கத்தார் MoCI வெளியிட்டுள்ள 214 தயாரிப்புகளின் அதிகபட்ச விலைபட்டியல்.

மேலும், மருந்தகங்கள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனங்களும் இந்த பொருட்களை MoCI ஆல் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்க தடை விதித்துள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது.