கத்தாரில் பழைய தொழில்துறை வீதியின் சாலைகள் இரு வாரங்களுக்கு மூடல்..!

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வீதி எண் (1) இன் வடக்குப் பக்கத்திலிருந்து தெரு எண் (32) பழைய தொழில்துறை பகுதியில் தொடங்கி, தொழில்துறை பகுதி பிரதான சாலையின் கிழக்குப் பக்கத்திலிருந்து நீர் தொட்டியின் மேற்குப் பகுதி வரை தொடங்கும் சாலை போன்றவைகள் இன்று (17-03-2020) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் இன்று அதிகாலை அனுப்பிய குறுந்தகவல்.

மேலும், அதிகாரிகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு, அனைத்து பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.