COVID-19 உடன் போராட அனைத்து வளங்களையும் MoI பயன்படுத்துகிறது.!

கொரோனா வைரஸிற்கு எதிராக கத்தார் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஏற்ப, உள்துறை அமைச்சகம் (MOI) தொற்று நோயிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க அதன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியுள்ளது.

MOI இன் கீழ் உள்ள பல்வேறு திணைக்களங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன், அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உதவுகின்றன. இது தொடர்பாக பல்வேறு சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களை திணைக்களங்கள் ஆரம்பித்துள்ளன.

நாங்கள் ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். எந்தவிதமான அலட்சியமும் இருக்கக்கூடாது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அல்-ஃபாஸாவின் இயக்குனர் லெஃப்டினன்ட் கேணல் நயீஃப் பின் ஃபலாஹ் அல்-தானி கூறியுள்ளார்.

மேலும், காவல்துறையினர் தங்கள் திறன்களை முழுமையாகச் செயல்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் தொற்றுநோய் தொடர்பான சூழ்நிலைகளைச் சமாளிக்க நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த, MOI ரோந்து பணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் அடையாளப்படுத்தியுள்ள அனைத்து தனிமைப்படுத்தல் தளங்களையும் முழுமையாகப் பாதுகாக்க ரோந்து பணிகள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன. நாட்டின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்வதற்காக தொழில்துறை பகுதி மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற பகுதிகளின் மூடிய பகுதிகளையும் அல்-ஃபாஸா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

ரோந்துப் பணியாளர்கள் பொது இடங்களில் மற்றும் மஜ்லிஸ்களில் மக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இது தவிர, உத்தரவுகளின்படி கடைகளும் மூடப்பட்டிருப்பதை அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள்.

COVID-19 இன் அபாயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில், அல்-ஃபாசா கத்தார் முழுவதும் சோதனைச் சாவடிகளையும் அமைத்துள்ளது.

வீதி மற்றும் வீதி போக்குவரத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள், வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை உத்தியோகபூர்வமாக குறிப்பிட்ட பின்தொடர்தல் மற்றும் சோதனைச் சாவடிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் ரோந்து மற்றும் போக்குவரத்து புலனாய்வுத் துறையின் உதவி இயக்குநர் லெப்டினன்ட் கேர்னல் ஜாபிர் அலி அல்-குபைஸி கூறினார்.

சாலை பயனர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், இந்த உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதில் கத்தாரின் முயற்சிகளை பலப்படுத்துவதற்கும் அவர்களுக்கு அதனை தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இவை மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.