கத்தாரில் வாகன ஆவணங்களை புதுப்பிக்க, பொதுமக்களை MOI கேட்டுக் கொண்டுள்ளது.!

கத்தாரில், வாகன ஆவணங்களை புதுப்பிக்க ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் (MOI) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கத்தார் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஏற்ப, உள்துறை அமைச்சகம் (MOI) குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வாகனம் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் புதுப்பிக்க அமைச்சகத்தின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அனைத்து வாகன உரிமையாளர்களும் இயக்குநரகத்தின், பல்வேறு திணைக்களங்களுக்கு செல்லாமல் மெட்ராஷ் 2 (Metrash2) மற்றும் அதன் வலைத்தளம் வழியாக MOI வழங்கும் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தளங்களில் ஓட்டுநர் உரிமங்கள், நம்பர் பிளேட்டுகள், விதி மீறல்கள், போக்குவரத்து விபத்துக்கள், போக்குவரத்து சான்றிதழ்கள் மற்றும் பிற சேவைகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட சேவைகளை கொண்டுள்ளது.

மேலும், வாகன உரிமைகள் புதுப்பிப்புகளை முடிக்க, மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் வலைத்தளங்கள் மூலம் வாகனங்களை காப்பீடு செய்ய முடியும் என்பதாகவும் இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.