கத்தார் உள்துறை அமைச்சகம் My Address என்னும் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகம்.!

பொதுமக்கள் தங்கள் தங்குமிடம் குறித்து அறிந்து கொள்ள உள்துறை அமைச்சகம் எனது முகவரி (My Address) என்னும் சேவையைத் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீதியின் பெயர், மின்சார இணைப்பு எண், மண்டலத்தின் பெயர் (Zone Name), அண்டை வீட்டுக்காரர் பெயர், Coordinates அல்லது கட்டிட எண் போன்ற ஆறு வெவ்வேறு விருப்பங்களை பயன்படுத்தி, குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டிடம் அல்லது பகுதி பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த சேவை மற்றும் குறிப்பிடப்பட்ட விவரங்கள் 999 மூலம் அவசரகால சேவைகளை அணுக அல்லது பொது தேசிய இயக்குநரகம் மூலம் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பொதுமக்களுக்கு உதவும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், Kahramaa எண்ணைக் கொண்டு பயனர்கள், மண்டல எண், வீதி எண் மற்றும் சரியான இடத்திற்கான Pin Number ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ எனது முகவரி இணையதளத்தில் இந்த புதிய சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

Source: The Peninsula Qatar