கத்தாரில் சமீபகாலமாக சுற்றிவரும் மோசடி குறுந்தகவல்; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.!

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) தனது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தங்கள் வங்கி அட்டை முடக்கப்பட்டுள்ளதாக கூறி வரும் மோசடி குறுந்தகவல்களை புறக்கணிக்குமாறு எச்சரித்துள்ளது.

மேலும், அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்று வரும் குறுந்தகவலை உடனடியாக குற்றவியல் புலனாய்வு பொது இயக்குநரகத்தின் பொருளாதார மற்றும் சைபர் குற்றவியல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இவ்வாறு வரும் மோடி குறுந்தகவல்களை கீழ்க்கண்ட வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் சென்று புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது:

  • Metrash2 அப்ளிகேஷன்
  • ஹாட்லைன்: 66815757
  • தொலைபேசி எண்: 2347444
  • மின்னஞ்சல்: cccc@moi.gov.qa